நல்லார் நலந்தீது நாணற்று நிற்பின் – நான்மணிக்கடிகை 93

இன்னிசை வெண்பா

எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக்
கல்லா வளர விடல்தீது – நல்லார்
நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது
கொள்கை அழிந்தக் கடை. 93

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

எக்காரணம் கொண்டும் ஓருயிரைக் கொலை செய்தல் தீதாகும்.

புதல்வரையும் புதல்வியரையும் கல்வி கல்லாமல் வளரும்படி விடுதல் தீதாகும்.

நாணம் இன்றி ஒழுகினால் பெண்களின் அழகு தீமை பயக்கும்.

தக்க கொள்கைகளையும், குணங்களையும் அழித்து யாதொருவர் செயல்பட்டால் அவருடைய குலத்திற்கே தீதாகும்.

விளக்கவுரை:

எல்லாவிடத்தும் என்றது வேள்வி முதலான இடங்களிலும் ஆகும்.
நிற்பின் – வாழ்தலின், அழிந்தக்கடை – அழிந்தால்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே