முடி வெட்டணுங்களா
சலூன் நகைச்சுவை
சலூன் கடைக்காரர்: ஹேர் கட்டிங் மட்டுமா, ஷேவிங் கூடவா?
வந்தவர்: என்னுடைய நாய்க்கு ஹேர் கட்டிங், எனக்கு ஷேவிங்
&&&&
கடைக்காரர்: டிரிம்மிங்ஆ, லைட் கட்டா, மீடியம் கட்டா?
வந்தவர்: நல்ல வெயில் காலம் இல்லையா, மொட்டை அடிச்சிடுங்க
&&&
முடிவெட்டுனர்: ஹேர் கட்டிங் சார்ஜ் 100 ரூபாய், நீங்க 90 ரூபாய் தான் தந்தீங்க?
வந்தவர்: நான் தான் ஒவ்வொரு முறையும் உனக்கு டிப்ஸ் தரேன். ஒரு முறை நீயும் எனக்கு தரலாமில்ல!
முடிவெட்டுனர்:???
&&&
முடிவெட்டுனர்: நீங்கள் இருவரும் இரட்டையர்கள் தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரே நாற்காலியில் இருவரும் அமர்ந்து கொண்டால், என்னால் ஹேர் கட்டிங் செய்ய முடியாது.
&&&&&
முடிவெட்டுனர்: ஐயா சாமியாரே,உங்களுக்கு தாடி மீசை அதிகம் இருப்பதால் தான், உங்களை சாமியார்னு ஒத்துக்கிறாங்க. இப்போ தாடி மீசையை மொத்தமா மழிச்சி விடுன்னு சொல்றீங்களே?
சாமியார்: என் சாமியார் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, என் மாமியார் என்னை தேடிக் கொண்டிருக்கிறார்.
முடிவெட்டுனர்:???
&&&
முடிவெட்டுனர்: ஐயா, எங்கள் கடையில் ஆபாச விஷயங்கள் பேசக் கூடாது.
வந்தவர்: சரி, அப்போது நாங்க அரசியல் பேசலாமா?
முடிவெட்டுனர்: ஐயோ, வேணாங்க, நீங்கள் ஆபாசமே பேசிக்கோங்க.
வந்தவர்:???
&&&
முடிவெட்டுனர்: ஏங்க, உங்களுக்கு தானே ஹேர் கட்டிங், ஏன் உங்கள் சம்சாரத்தையும் கூட்டி வந்தீர்கள்?
வந்தவர்: முடிவெட்டுனர் காதில் (ரகசியமாக) "நான் தெரியாத்தனமாக என் பக்கத்து வீட்டில்' நான் என் வீட்டில் முடிசூடா மன்னன்' என்று சொன்னது இவளுக்கு தெரிந்து விட்டது. அதனால் எனக்கு மொட்டை அடித்து விட இங்கே கூப்பிட்டு வந்திருக்கிறாள்.
முடிவெட்டுனர்:???
&&&
ஒருவர்: என்னப்பா ஆச்சரியமாக இருக்கிறது, முடி வெட்டிக் கொள்ள வந்தவரும் தூக்குகிறார், முடிவெட்டுனரும் முடி வெட்டிய படியே தூக்குகிறார்?
இன்னொருவர்: வெட்டிக்க வந்தவரை அவர் மனைவி இரவில் தூங்க விடவில்லையாம். முடிவெட்டுனருக்கு இன்று காலை அவர் மனைவி காப்பியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டாராம்.
ஒருவர்:???