முடி கொட்ட போங்க சலூன்
முடிவெட்டுனர்: உங்க தலைதான் மொத்தம் வழுக்கையாக இருக்கிறதே, பிறகு எதற்காக உங்களுக்கு ஹேர் கட்டிங்?
வழுக்கை ஆசாமி: எனக்கு ஹேர் கட்டிங் இல்லை. தலையில் எண்ணெய் போட்டு மாலிஷ் பண்ணனும்.
முடிவெட்டுனர்:???
&&&
ஹிப்பி ஒருவர் தலைமுடி முழுவதையும் வெட்டிக் கொண்டு, தொப்பி போட்டு கொண்டு, புறப்படுகிறார்.
முடிவெட்டுனர்:சார், உங்கள் தலையிலிருந்து இரண்டு கூடை முடி எடுத்தேன். நீங்கள் கட்டிங் பணத்தை கொடுக்காமலே போகிறீர்களா?
தொப்பி: அவ்வளவு முடியை நான் உனக்கு காணிக்கையாக செலுத்தியிருக்கேன். நீ என்னடான்னா, காணிக்கை வாங்கிக் கொண்டு அதற்கு கூலி கேட்கிறாயா?
முடிவெட்டுனர்:???
&&&
வந்தவர்: ஏன்யா, கொஞ்சம் அசந்து தூங்கினேன், அதுக்குள்ள மீசையில் பாதியை எடுக்கச் சொன்னா, வலது பாதியை மொத்தமா எடுத்துட்டாயே, இப்போது நான் எந்த முகத்தோடு என் மனைவியை போய் பார்ப்பேன்?
முடிவெட்டுனர்: ???
&&&
ஒருவர் முடிவெட்டுனரிடம்: ஏன் இந்த ஆசாமி பாதி ஷவரம் மட்டும் செய்து கொண்டு, சென்று விட்டார்?
முடிவெட்டுனர்: அவருக்கு ஷவரம் செய்யும் போது, சந்தேகம் வந்து பர்ஸில் பார்த்தபோது, பாதி பணம் தான் இருந்ததாம். அதான்!
ஒருவர்???
&&
வந்தவர்: உங்களுக்கு இவ்வளவு அதிகமா தலைமுடி இருக்கே, என்ன ரகசியம்?
முடிவெட்டுனர்: வந்தவர் காதில் மெதுவாக, " அது சொந்த முடி இல்லை. விக்கு. எனக்கு பூரண வழுக்கை. இதை யாருக்கும் சொல்லாதீங்க.
வந்தவர்:???
&&&
முடிவெட்டுனர்: ஏன் சார் நீங்கள் இங்கு முடி வெட்டிக் கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் இந்த பக்கம் வரவேயில்லை?
வந்தவர்: முடியே தலையில் வரவில்லை என்றால் நான் இங்கே எதற்கு வருவது? இப்போது கூட விக்கு தான் வைத்திருக்கிறேன்.
முடிவெட்டுனர்: என் கேள்(விக்கு) சரியான பதில் தந்தீர்கள்.