ஆனந்த பைரவம் – சுத்த பைரவம் – சொர்னானந்த பைரவம் - ஆனந்த ரசம் – வினோத பைரவம் - கலி விருத்தம்

ஆனந்த பைரவம் – சுத்த பைரவம் – சொர்னானந்த பைரவம்
பிரமானந்த பைரவம் – ஆனந்த ரசம் – வினோத பைரவம்
கலி விருத்தம்
(காய் 4)

ஆனந்த பைரவம்பின் அடர்சுத்த பைரவஞ்சொன்
னானந்த பைரவம்பிர் மானந்த பைரவம்மா
ஆனந்த ரசம்வினோத மாம்பைர வம்இவற்றால்
வானந்த மேவுரூட்சை வருதிரி,தோ ஷம்போமே

பதார்த்த குண சிந்தாமணி

ஆனந்த பைரவம், சுத்த பைரவம், சொர்னானந்த பைரவம், பிரமானந்த பைரவம், ஆனந்த ரசம், வினோத பைரவம் இவை முதன்மையான சுரங்கள், திரிதோட நோய்கள் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-22, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே