சிந்தனைக் கவிதை
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
*சிந்தனைக் கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
இன்று
எமது நாட்டு
அரசியல்வாதி வீட்டின்
செல்லப்பிராணி
கொரோன வைரஸ் தான்
ஆம்....
அவர்கள்
வா என்றால் வரும்
போ என்றால் போகும்...
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என் நாட்டின்
அரசியல்வாதிகளை
கண்டு
குடிமக்கள் மட்டுமல்ல ...
அவர்களோடு
குடும்பம் நடத்தும்
மனைவிகளும்
பயந்து கொண்டுதான்
இருக்கின்றனர்.....
தங்களையும்
கார்ப்பரேட் கம்பெனிக்கு
விற்று
விடுவார்களோ? என்று....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீர்நிலைகளில்
கட்டிய
தடுப்பணைகளில்
உண்டான
விரிசல்களிலும்
உடைப்புகளிலும்
நன்றாக தெரிகிறது
இன்றையா
அரசியல்வாதிகளின்
நாட்டுப் பற்றும்....?
நோட்டுப் பற்றும்...?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
படம் பார்க்க...
பாட்டு கேட்க...
வாட்ஸ்அப்
பேஸ்புக் நோண்ட
பயன்படுத்தப் பட்டதே தவிர...
கடைசிவரை
பயன்படுத்தவே இல்லை
படிப்புக்காக......!
பள்ளியில் வழங்கிய
மடிக்கணினி....!!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
காவியச் சீதை கூட
சிறை எடுத்துச் சென்று
மீட்டு வந்த பிறகுதான்
தீக்குளித்தாள்.....!
ஆனால்....
கலியுகச் சீதைகளோ
சிறையெடுத்து
செல்லாமலேயே
தினம் தினம்
தீக்குளிக்கின்றனர்....!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑