மொழி

உலகில்
வன்சொல் இல்லா ஒரே மொழி !
அதிகபட்சம்
இருவர் மட்டும் பேசும் மொழி !
அறிந்தவர் எவரும்
எழுதிப் பதியா மொழி !

படைத்தவனே அன்றி
எவராலும்
உச்சரிக்க முடியா மொழி !

படைத்தவன் வளரத்
தேய்ந்து தீர்ந்து போகும் மொழி !

தாய் மொழியும் தராத
பேரின்பம் தரும் மொழி !

அழுகை மொழி
புன்னகை மொழியாகி
பிஞ்சு மொழியில்
கொஞ்சிப் பேசி -மெல்ல
தாயின் மொழி கற்க,
குழந்தை தந்து
போன மொழி !

மழலை மொழி !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (3-May-22, 10:33 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : mozhi
பார்வை : 90

மேலே