வீடு

சிறிதளவு
மழையில் நனைந்த
பறவையொன்று
தன் உடல் சிலிர்ப்பதை
கதகதப்புடன் அமர்ந்து
சாளரம் வழியே
அதைப் பார்த்து ரசிக்கும்
என் தாய்க்கு
இன்றும் நினைவிருக்கும்
தானும் தன் குழந்தைகளும்
மழை நாளில் வீட்டிலேயே உலர்ந்த இடம் தேடி அலைந்த அந்நாட்களை....
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-May-22, 9:33 am)
Tanglish : veedu
பார்வை : 116

மேலே