அவள்
அவள் குவிந்த பவள அதரங்கள்
அலர்ந்து புன்னகைக்க அந்த புன்னகையில்
கவிதைகள் ஆயிரம் மலர அவள்
நீண்ட கெண்டை விழிகளின் மணிகள்
இங்கும் அங்கும் சதிராடி நடனம்புரிய
அக்கண்களுக்கு காவியம் படைத்தான் கவிஞன்
இப்படித்தான் அழகுக்கு இலக்கியமானாள் அவள்