என்ன கொடும சார் இது

பிறந்தது முதல் செவியுற்றேன்
யுத்தம் என்றார்கள் ..! ம்... ம் . பழகிப்போச்சி
படிக்கும்போது ..பேச்சவார்த்தையாம் ..
.சமாதானமாம் ! ம்... ம் . பழகிப்போச்சி
கல்வி முடிந்து ..வாழ்வின் ஆரம்பம் ...
போரில் வெற்றியாம் யப்பாடா ! . முடிஞ்சி போச்சி
மறுகணமே .. சுனாமியாம் ..இதுவேறயா
! ம்... ம் . பழகிப்போச்சி
பினத்தின் நடுவே வாழ்வோட்டமாம் ! ம்... ம் . பழகிப்போச்சி
நாட்டுக்கு நிறைய வெகுமதிகலாம் ..வளர்ச்சியாம் ! ம்..ஆனந்த பெரும்மூச்சு
திரும்பவும் மதக்கலவரமாம் ! ம்... ம் . பழகிப்போச்சி
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலாம் ... ! ம்... ம் . பழகிப்போச்சி
உலகை உளுக்கும் கொரனவாம்... ! ம்... ம் . பழகிப்போச்சி
வாழ்வாதரப்பிரச்சினையாம் ....போராட்டமாம் என்ன கொடும சார் இது .?

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தென (4-May-22, 5:43 pm)
சேர்த்தது : Rifnas Ahamed
பார்வை : 323

மேலே