SUKANUPAVAB PUNNAKAI

மலர் மடியில்
விழுந்தபோது
குனிந்து பார்த்தாய்

மழைத் துளிகள்
உன் மீது தூவியபோது
நிமிர்ந்து பார்த்தாய்

இளந்தென்றல் காற்று
உன்னைத் தழுவியபோது
கண்மூடி ரசித்தாய்

அப்போது உன்னையும்
உன்னிதழில் மலர்ந்த
சுகானுபவ புன்னகையும்
நான் ரசித்தேன்

எழுதியவர் : Kavin charalan (4-May-22, 6:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே