காதல் மகள் நீ உன் காதலன் நான் ❤️💕
மாலை நேரம் மழை மேகம் வந்து
போகும்
காற்றின் வேகம் மிக அதிகம் ஆகும்
மழை துளி என்னை வருடி செல்லும்
மண்ணில் விழும் சத்தம் மிக
அழகாகும்
அவள் நனைந்து கொண்டே
ஓடிவரும் கொலுசின் ஓசை
இனிமையாகும்
என் இதய குடையில் அவள் வந்து
நுழைய அந்தி மழை காரணம் ஆகும்
அளவில்லாத ஆனந்தம் அருவியாய்
ஓடும்
அவளை கண்டு என் கண்கள்
வியந்து போகும்
காதல் வந்து என்னை கவர்ந்து
போகும்
என் காதல் தேவதை மெல்ல
என்னை கடந்து போகும்