முதுமை காதல்
குழந்தை குணம்
விழுந்த பல் முளைக்காத
சிந்திய வியர்வையால்
உரமேறி ஒட்டிய தோளோடு
உடுத்திய சீலையில்
தவழ்ந்து வருகிறாள்
ஜொலிக்கும் பவுர்ணமி............,
தேன் குரல் இனிமை
பேசும் மொழி
திகட்டது பாச மழை
அள்ளி அள்ளி தருவாள்
நான் அள்ள அள்ள
கொஞ்சும் செந்தாமரை...........,
60 வயசு குழந்தை ராசா
என் நினைவுகள்
சுமந்த பட்டு ரோசா
கதைகள் பல பேசுவா
காத்துல கலந்த இசையோட
இருவருள் நிறைந்த
காதலோட....................................,
மன்மத லீலையில்
நீ மாத்திரம்
மரகத தேரில் வீதி உலா
காலத்தை மறந்த
திருமந்திரம்
காதல் மொழி பேசிடும்
ஒரு மந்திரம் ................................,
நாட்கள் நகர்ந்தாலும்
வயசு கூடாது
நாடி தளர்ந்தாலும்
காதல் விலகாது
நரை கூட கூட
ஏக்கம் குறையாது .........

