ஷேரிங் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

சாய்ந்தே அமர்ந்திருக்கும் ஷேரிங் விநாயகன்
ஓய்வா(ய்) இருந்திருக்க உன்னத - தாய்போல
பார்வையெலாம் நம்மீதே என்றும் படர்ந்திருக்கும்;
நேர்மையாய் நின்றே வணங்கு! 1

கால்மேல்கால் போட்டபடி கற்பகமாய் சாய்ந்திருக்கும்
ஆல்போலக் காத்திடும் ஆண்டவன் - வேல்கோட்டு
ஷேரிங் விநாயகன் தாள்போற்ற, வேண்டிய
பேரின்பம் கிட்டும் விரைந்து! 2

- விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-22, 6:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே