சேலம் வெள்ளை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
ஒளிவீசும் தங்கக் கிரீடமுடன் தானே
நளினமாய்க் காட்சி தருவோன் - எளியோனே
நானுனக்குக் கைம்மாறாய் என்செய்வேன் நீயெனக்குத்
தேனான நற்றமிழ்தா தேர்ந்து! 1
பளபளக்கும் மேனியனாம் பாரினில் எங்கள்
தளர்ச்சியைப் போக்கும் தயாளன் - ஒளிர்முக
வெள்ளை விநாயகனே வேண்டினோர்க்கு வெந்துயர்
கள்ளமின்றி நீக்கு கனிந்து! 2
- விநாயகர் பட உதவி - தினமலர்