பொற்கைப் பாண்டியன்

நேரிசை வெண்பா


இரவு நகருலாச் சென்றனன் மன்னன்
புரவில் செவிகேட்டக் கொஞ்சல்--- கரவிலா
மன்னன் கதவை திறந்த்தூடு நோக்கிட
இன்பத்தை துய்கும் இணை


நேரிசை வெண்பா

காதல் இணையும் கதவின் உரசலை
காதால் தெரிந்துடன் யாரென --. ஏதமிலா
மன்னன் பிறரின் கதவையும் தட்டிட
அன்னார் திறந்தார் கதவு

ஆசிரியப்பா


மன்னனின் காவலர் சுளுவாய் தப்ப
தேடியும் கிடைக்கா lபோனார் மன்னரின்
மனமோ ஏதோ பேசி நொந்தது
மனைவாழ் சோடிக்கு மிடைஞ்சல் செய்தோம்
என்றெண்ணி வருந்தி வெம்பினான் கடைசியில்
கதவை வீனேத் தட்டிய கையை
வெட்டி தனக்கே தண்டனை கொடுத்தான்
புண்ணாறி கரத்திற்கு பொன்கைமாட்ட
மன்னன் பொற்கை பாண்டியன் என்றாறே

எழுதியவர் : பழனி ராஜன் (4-May-22, 3:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 79

மேலே