அமிர்தக் கடுக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அமிர்தம் எனுங்கடுக்காய் அம்புவியில் உள்ள
திமிர்தசி லேட்டுமத்தைத் தீர்க்கும் - விமிதச்
சதைப்பற்றுண் டாயிருக்குஞ் சாற்றிலதன் றேசங்
கதிக்கொத்த காசியென்பார் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
காசியில் கிடைக்கும் அமிர்தக்கடுக்காய் சதைப்பற்றுள்ளது; இது கபத்தை நீக்கும்