ஆயிரம் யோசனைகள்
மனதில் ஆயிரம் யோசனைகள்
என்ன இது நமக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை காலம்
மெல்ல நடைமேடையில் நடக்கிறேன்.
தன் உடை அழுக்கோடு வறியவர் கேட்கும் யாசகம்
கைக்குழந்தையோடு உழைக்கும் பெண்
உடல் வலு இருந்தும் மன வலு இல்லா மனிதன்
பயணத்தில் நம்மோடு பயணிக்கும் உழைப்பாளிகள்
உறுப்பிழந்தும் ஊக்கம் இழக்கா மாற்றுத் திறனாளிகள்
சிறு நடையில் தான் எத்தனை ஏற்ற தாழ்வு
ஓ என்ன யோசனை மனமே ! உண்மையில் உனக்கு சோதனை காலம் என்றா!