மாரியின் மேல் மையல்

மனதில் உற்சாகம் வீச
மண் வாசனை பொங்கி வரும்!

சாரல் சாளரத்தின் மீது
மாறி மாறி பொழிய உத்வேகம் தரும்!

கோடையின் வெப்பினை
மாற்றி மனம் குளிரும்!

மாரியின் மேல் மையல் கொள்ளா மானிடன்
மாபூமியில் தான் உண்டோ!

மழையின் குளிர்ச்சி தரும் குதுகலம்
சொல்லிமாளாது!

முகத்தில் முத்துமுத்தாக முத்தமிடும் மழை துளியின் காதல்!

எழுதியவர் : Kaleeswaran (10-May-22, 11:51 am)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 65

மேலே