உன்முகம்பார்க்க என்அழகு கூடும்
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்ப நேரிசை வெண்பா
காதலர் நீங்க பசலைநோயால் தோளுருக
சாதல் நிலைக்கெனைத் தள்ளியது --காதல்
தலைவன் முகம்மீண்டும் பார்க்கநீங் கும்ப
சலையும் திரும்புமென்வண் ணம்
காதலர் என்னை விட்டு பிரிய பசலை உடலுருக்கு நோயால்
மேனியின் மெருகும் திடமும் எனை விட்டு நீங்க அடையாளம்
சொல்லா வண்ணம் போனேன்.மீண்டும் நான் அவரைக்.
காண்பேனாயின் என்னுடைய பசலை உருக்கு நோய்
நீங்கி உடனே என்மேனி மெருகு கூடி வனப்பு மிகும்
காமத்துப்பால். அதிகாரம் 19. பாடல். 5
..,.,...