உன்னை கண்ட நாள் முதல் 555

***உன்னை கண்ட நாள் முதல் 555 ***



ப்ரியமானவளே...


காதல் இல்லாததால் கவலை
இல்லாமல் இருந்த நான்...

உன்னை கண்டா நாள்
முதல் கவலை கொண்டேன்...

இனி எப்போது உன்னை
பார்ப்பேன் என்று...

உன்னிடம் எப்படி
நான் பேசுவதென்று...

மீண்டும்
கவலை கொண்டேன்...

இன்று என்னில் நீ
பாதியாகிவி
ட்டாய்...

இப்பவும்
கவலைதான் எனக்கு...

நாம் சேர்ந்திருக்கும்
இந்த நேரத்திலும் கூட...

இந்த நிமிடம் ஏன்
கரைகிறது என்று...

கவலைகளை நான்
நிரந்தரமாக மறந்துவிட..

நீ எப்போது என் கரம் கோர்த்து
என்வீட்டு வாசல் வருவாய்...

நீ
என் துணைவியாக...

உன்னை காணுமுன்
நான்
இழந்த காதல் நிமிடங்களை...

நீதான் எனக்கு
திருப்பி கொடுத்தாய்...

என்
வாழ்க்கை என்னவென்று...

அர்த்தம் புரியவைத்ததும்
நீதாண்டி கண்ணே.....


*
**முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (12-May-22, 8:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 544

மேலே