வாழ்கையில் சிக்கனம்
படித்தவனுக்கு சரியான வேலையும் இல்லே ,
படிக்காதவனுக்கு முறையான கூலியும் இல்லே,
ஐம்பது(50), பத்து (10) கூலி மாறவும் இல்லே,
மாதம் பத்தாயிரம் சம்பளம் ஏறவும் இல்லே,
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால,
காய்கறியும் விலையும் கூடுது உச்சத்துல,
சீட்டு போட்டு பணம் சேர்த்ததில்ல,
எதிர்கால செலவுகள பார்த்துக்கொள்ள,
கல்யாணம் காட்சி பண்ணதுல,
கடனும் ஏறுது லட்சத்துல ,
குழந்தை குட்டி-னு ஆனதால,
வட்டியும் விடல மிச்சத்துல, - வாழ்க்கையில
சிக்கனமா வாழ்ந்திருந்தாலே, - இந்த
சிக்கல் ஏதும் வந்திருக்காதில்லே,
வயசு அறுபது கடந்து போனதால,
வந்த அறிவு எனக்கு பயனில்ல,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
