பண்பாட்டின் வீழ்ச்சியா

குழந்தைக்கு நோயென்றால்
மருந்துக்கு தாயல்லவா?
பிள்ளை படும் பாட்டை
பெற்றவள் பொறுக்காமல்
தன்னை வருத்தி மருந்துண்ணும்
தாய்க்கு ஈடாக
எந்தக் கடவுளும் இல்லை

எல்லா இடத்திலும் தான்
இருக்க இயலாததால்
இறைவன் வீடுதோறும்
ஒரு தாயைப் படைத்தான்
அன்பை அவளிடம் கொடுத்து
அரவணைக்க பணித்தான்
பூஜிக்கவும் வழிகாட்டினான்

உடலையும், உயிரையும் வருத்தி
உதவிய தாய், தந்தை
அறிவையும், ஆற்றலையும்
பழக்க வழக்கங்களையும்
புகட்டி வளர்த்தார்கள்
பெற்றோர்கள் தன் நலத்தைத்
தொலைத்த தெய்வங்கள்

பிளைகள் வளர்ந்து ஆளானபோது
அன்னை இருப்பது
முதியோர் இல்லத்தில்
பிள்ளைகள் இருப்பது
அன்னையர் இல்லத்தில்
தந்தையோ படமாக
வீட்டிற்குள்

வாழ்வளித்து
உயர்த்திவிட்ட பெற்றோரை
வெளியில் தங்கவைத்து
வாழ வைப்பது முறையா?
தமிழர்களுக்கு மனசாட்சி இல்லையா
இல்லை தமிழ் நாட்டு
பண்பாட்டின் வீழ்ச்சியா?

எழுதியவர் : கோ. கணபதி. (13-May-22, 1:46 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 34

மேலே