ஊசிப் பாலைக் கீரை - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

மேக மகறும் விழிகுளிரும் நாளத்தின்
வேக மகறுமங்க மேனியிடும் - நாளத்தின்
வாசிப்பா லைப்பருவ மாந்தரைவீக் குங்கொடியே
ஊசிப்பா லைப்பன்னம் உண்

- பதார்த்த குண சிந்தாமணி

ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி, கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-22, 5:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே