தீயாய் இரு

பட்டாலும் சுடும்
தொட்டாலும் சுடும்
கிட்ட நெருங்கினால்
வெப்பத்தைக் கக்கும்
தீயைப் போல
பெண்ணே நீயும்
தீயாய் இரு!

உன்னை வதைத்து,
சிதைக்க நினைப்பவர்களை
நீ சிதைத்து விடு...
உன்னைக் கண்டாலே
அஞ்சி நடுங்கிட வேண்டும்
கயவர்கள்...

தயக்கங்களை
தள்ளி வைத்திடு...
தைரியத்தை
முன்னே நிறுத்திடு...
சுடர்விடும் நெருப்பாய்
உன் வாழ்வை ஒளியாக்கு...
தனலாய்
எறிந்துகொண்டே இரு...
சந்தர்ப்பம் வந்தால்
எறித்துத் தள்ளு...

மென்மையானவள்
பெண்னென்று
இருந்தது போதும்...
உன்னைக் காத்திட
தீயாய் இருப்பதில்
தவறில்லை...
பெண்ணே! தீயாய் இரு

இவள்
எணணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (14-May-22, 9:44 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : theeyaay iru
பார்வை : 80

மேலே