கேட்டேன்

அன்பான உலகம் கேட்டேன்,
ஆயுதம் அற்ற நாட்டை கேட்டேன்,
இயலாதவருக்கு உரிமைகள் கேட்டேன்,
ஈசனை ஒரு முறை பார்க்க கேட்டேன்,
உயிர் பிரியும் வரை உழைக்கக் கேட்டேன்,
ஊரே செழிக்க வனங்கள் கேட்டேன்,
எட்டிப் பிடிக்கும் நிலவைக் கேட்டேன்,
ஏணியில்லா கல்வி கேட்டேன்...,
ஐயம் அற்ற மதங்கள் கேட்டேன்...
ஔவயாரிடன் பேசிடக் கேட்டேன்,
ஃக்கரையான உறவுகள் கேட்டேன்..

#siven19

எழுதியவர் : sivenesh (18-May-22, 6:48 pm)
சேர்த்தது : siven19
Tanglish : KETTEN
பார்வை : 93

மேலே