இயற்கையின் எழில்

இனிய காலைப்பொழுதில் புள்ளினங்கள்
கூவிக் கரையும் ஆதவன் குணதிசையில்
வந்தடையும் போது அவன் கதிர்கள்பட்டு
காதல்கொண்டு இதழ்கள் மெல்ல விரிந்து
அழகாய் முழுவதுமாய் பெருமலராய்க் காட்சி
தரும் தடாகத்து செந்தாமரையில் சோலைக்குயில்
இசையில் காலில் சதங்கை ஒலிக்க
கைகளில் வலைகள் குலுங்க ஆடிவரும்
அத்தைமகள் போல ஓடிவரும் ஓடையின்
இனிய ஓசையில் அங்கு அதில்
வந்து சேர்ந்திடும் சிற்றருவியின் ஓசையிலும்
பச்சைப் பட்டு விரித்தாற்போல இருக்கும்
புல்தரையில் நல்முத்து படர்ந்தாற்போல் காட்சி
தரும் பணிமலர்த்துளிகளும் அதன் மேல்
தொகை விரித்தாடும் கோல மயில் அழகும்
இயற்கைத் தரும் கொள்ளை அழகு
இதற்கிணை எது இவ்வுலகில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-May-22, 8:53 pm)
Tanglish : iyarkaiyin ezil
பார்வை : 246

மேலே