நாளெல்லாம் புன்னகை
நாளெல்லாம் புன்னகை..
---------------
காலையில் நடந்ததும் காஃபி- அதில்
கலந்து சுகித்திடும் வாசி!
வேலையின் இடையிலும் சேதி - பல
சொல்லும் எந்தனின் பாதி !
பகலிலும் இரவிலும் பரவும் - ஒரு
பாகம் இன்றியே நிரவும்!
புகழிலும் மகிழ்விலும் புலரும் -என்றும்
புதிது புதியதாக மலரும் !
பயிற்சிகள் திறமைகள் கூட்டும் - உன்னை
பலர்முன் உயர்த்தியே காட்டும்!
முயற்சிகள் வெற்றிகள் ஈட்டும் -அங்கு
முத்தெனப் புன்னகை பூக்கும் !
-யாதுமறியான்.