எது அழகு தெளிந்தேன்

அவள் அழகு மன்மதனையும் மயக்கும் அழகு
அவள் அழகில் மயங்கி அவளே கதி
என்று வாழ்ந்து வந்தேன் சிந்தைத் தெளிந்தது
அழகின்மேல் படிந்த மோகம் விலகியது
சித்தமெல்லாம் இனி அவனே கதி
என்று தெளிவானது இனி எல்லாம்
எனக்கு அவனே மூவருக்கு முதல்வன்
முகுந்தன் கார்மேக வண்ணன் கதிர்
மதியம் முகத்தான் கண்ணபெருமான்
இனி நான் என்றும் அவன் காதலி
என் நாயகன் மணிவண்ணன் அவன்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-22, 7:49 pm)
பார்வை : 171

மேலே