சிங்ளா

தம்பி உன் பக்கத்து வீட்டு பர்வீணா பொண்ணுக்கு இரட்டைக் குழந்தைங்க பொறந்திருக்குதாமே.
@@@@@
ஆமாம் அக்கா.
@@@@@
தற்காலத் தமிழர் மரபுப்படி புதுமையான இந்திப் பேருங்களக் குழந்தைங்களுக்கு வச்சிருக்கிறாங்களாமே.
#@@@@@
ஆமாம் அக்கா.
@@@@@@
அந்தப் பேருங்களச் சொல்லுடா தம்பி.
@@@@@@
மொதல் குழந்தை பேரு சிங்ளா. அது வடமாநிலத்தில சிலரு அவுங்க பேருக்குப் பின்னாடி சேத்துக்கற‌ பேராம்########
சரி. அப்ப இரண்டாவது பொறந்த கொழுந்தை பேரு டபுளா.
@@#####@
சரியாகச் சொன்ன அக்கா.
கொழந்தைங்களா 'சிங்ளா, டபுளா'னு அவுங்க கொஞ்சறபோது அதைக் கேக்கறது போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது அக்கா.
##@@@@
எப்பிடியோ புதுமையான இந்திப் சேருங்கள் வச்சு தமிழ்ப் பற்றுள்ள தமிழர்கள்ங்கிறத நிரூபிச்சிட்டாங்கடா அவுங்கதான்டா தமிழர்கள்.

@@@@@@
சரியாச் சொன்ன அக்கா.

எழுதியவர் : மலர் (24-May-22, 4:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 58

மேலே