உங்க மாடுமேய்ப்பவர் எங்கே

உங்க மாடுமேய்ப்பவர் எங்கே?
######
எங்ககிட்ட மாடே இல்லையே, நீ மாடு மேய்ப்பவர் எங்கேனு கேக்கற?
@@@@@
என்னடா நீயும் நானும் ஒரே வயசு. இதே ஊரில் வாழ்ந்திட்டு இருக்கிறோம். எனக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. மாடு‌ மேய்க்கிற ஆளுக்கு எங்க வீட்டில என்ன வேலை?
#######
உங்க வீட்டில மாடு மேய்ப்பவர் ஒருத்தரு இருக்கிறாரு. பந்தயம் ஆயிரம் ரூபாய். நான் சொன்னதை நிரூபிச்சிட்டா எனக்கு ஆயிரம் ரூபாய் நீ தரணும்.
##########
சரிடா வேலு. நான் ஒத்துக்கிறன்டா. நீதான்டா நட்டப்படப் போற.
########
உங்க 'கோபி' எங்கடா?
#@@@@@@@@
அவன் விளையாடப் போயிருக்கிறான்டா.
@@@@@
அவம் பேருக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@
இந்திப் பேருக்கெல்லாம் யாருடா அர்த்தம் பாத்துப் பிள்ளலங்களுக்குப் பேரு வைக்கிறாங்க?
@@@@@
சரி. இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுடா. நீ தோத்துப் போயிட்ட.
@@@@@@
எப்பிடிடா?
@@@@@@@
சரி. பையன் பொறந்ததும் சோசியரைப் பாத்தயா?
@@@@@@@
அவுரு தான் பையன் பொறந்த நேரம் ராசிப்படி "கோபி'னு பேரு வையுங்க. அதுக்கு இரண்டு அர்த்தம் இருக்குது. ஒண்ணு சாமி பேரைக் குறிக்கும். இன்னோரு அர்த்தம் உனக்குத் தேவையில்லை"னு சொல்லிட்டாருடா.
#@@#@@@@
சோசியர் சொன்ன சாமி பேரு 'கிருஷ்ண பகவான்'. அவர் சொல்லாத அர்த்தம் 'மாடு மேய்ப்பவர்'.
@@@@@@
அட இதெல்லாம் எனக்குத் தெரியாம போச்சே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Gobi = Cowherd, Lord Krishna. Sanskrit origin

எழுதியவர் : மலர் (24-May-22, 8:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 84

மேலே