மன்னவன் என்றன் மனந்தனில் மகிழ்வாய் நீயே - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

புன்னகை பூக்கும் புதுமலர் ஒளியாய்
..புகழ்பெறு நிலவென ஆனாய்;
கன்னியாய்க் கனக மணியெனக் கருத்தில்
..காதலின் துணையென நின்றாய்!
என்றனின் மனத்தில் இசைத்திடும் பாட்டாய்
..இனிமையாய்த் தண்ணொளி தந்தாய்;
மன்னவன் என்றன் மனந்தனில் மகிழ்வாய்
..மதிப்புறு பெண்ணென நீயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-22, 9:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே