விடியலில் தேவி தரிசனம்

விரலால்நீ வீணை மீட்டினால் ராகம்
__மலரை வருடினால் வாசம்
விரலால்நீ பேனாவைத் தொட்டால்
__காவியம் தூரிகை தொடின் ஓவியம்
விரலால்நீ இதழ்தொட்டுச் சிரித்தால்
__உனது புன்னகை பாடும் பூபாளம்
விரலால்நீ போடுவாய் மார்கழிக் __கோலம் விடியலில் தேவி தரிசனம் !
தலைப்பு :--
விடியலில் தேவி தரிசனம்
யாப்பில் எழுசீர் நெடில் ஆசிரிய
விருத்தம்