காதல்..!!

கன்னியை கண்டதுடன்
காதல் கொண்டேன்
பார்ப்பாள் ரசிப்பாள்
ஏன் என்னிடமே வசிப்பாள்..!!

என்றாவது ஒருநாள்
மனதைத் திறந்து
அன்பைப் பரிமாற நினைத்தால்
சினிங்கி சித்ரவதை செய்வாள்..!!

மூச்சு முழுவதும் கலந்தவளே
உன் முந்தானை சிறையில்
அகப்பட்டு காத்துக் கிடக்கிறேன்
முற்றுப்பெறாத என் காதலோடு..!!

பாவையே என்னுடன்
பழகிபார் இந்த சிறு மனதும்
பறந்த உலகமாய் தெரியும்
காதல் எவ்வளவு விசித்திரம்..!!

ஒருவருக்காக காக்கவைத்து
அவர்கள் கண்ணீரும் சிந்தவைப்பது
ஆனால் அவர்
கண்டுகொள்ளாமல் போகிறேன்..!!

எழுதியவர் : (2-Jun-22, 5:27 am)
பார்வை : 50

மேலே