தையல் நீயல்லவா
வெளி ஊர் சென்று
வேலையை முடித்து விட்டு
வீடு திரும்பிய கணவனுக்கு
ஆசையாய் செய்த வடையை
அன்பு மனைவி
கணவனுக்குக் கொடுத்தாள்
உண்பதற்காக அவர்
வடையை பிய்த்தபோது
அதில் நூல் வந்தது ,
மனைவி கேட்டாள்
“ வடை ஊசியிருக்காயென “
அதற்குக் கணவன் சொன்னான்
“ வடையில் நூலும் இருக்கிறது
ஊசியும் இருக்கிறது—இது
தையலுக்கு தான் ஆகுமென
தையல் நீயல்லவா,
அதனால் நீயே வைத்துக்கொள்
என்றான் கணவன்