மலர்கள் வெறுமனே மலர்கின்றன
மலர்கள் வெறுமனே மலர்கின்றன...
செடிகள் தான் பூக்கின்றது...
மலர்களைத்தானே ரசிக்கிறோமேயன்றி
செடிகளை யாரும் ரசிப்பது கிடையாது !!!
ரசிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம்
செடிகளுக்குக் கிடையாது
இருந்தாலும் பூக்கின்றவே !!!
உயிர்கொடுத்த செடிக்கே
உரமாகிவிடுவோம் என்பதனாலோ
காலையில் மலர்வன மாலையில்
உதிர்கின்றன !!!
எதிர்பார்ப்பே இல்லாத சாமிக்கு
எதிர்கலமே அறியாத மலர்களால்
எதற்காக அபிசேகம்??
தற்குறிகளை அவர்
தண்டிக்க மாட்டார் -
இருந்தாலும் கற்பனை மிகுதியால்
கண்ணீர் வடிக்கிறோம் !!!
- M.S.M. Mafaz