நாய் விரட்டும் போது
ஒரு கல்லே
பெருந்துணையாகும்
நாய் விரட்டும் போது --- (க)
கடுஞ்சொல்லே
நற்றுணையாகும்
பழியை விரட்டும் போது --- (உ)
இறைவனும் அஞ்சுவார்
இக்காலத்து
மாந்தரின் சொற்செயலைக் கண்டு --- (ங)
மறைகளை எழுதினார்கள்
மனிதர்யாவரும்
தெளிவு பெற்று சிறப்படைவே --- (ச)
கல்லும் சொல்லும்
நல்வழியை
காண்போர் கண்ணோட்டத்தின்படி --- (ரு)
மண்ணின் பள்ளத்தில்
நீரும்மரமும்
நிலைக்கும் காற்றோடுநெருப்பு நகருமே --- (சா)
முறையாக கற்றோர்
நடக்கார் முறைதவறி
நடப்பின் செறுக்குள் கட்டுண்டார் --- (எ)
ஆர்வமே கற்கும்வழி
அதுவின்றி
கற்கும் கல்வி பயனளிக்காது --- (அ)
அணுவே பெருமாற்றல்
அதைக்காணுதலரிது
ஆற்றலில் உயர்ந்தவை மறைவாய் --- (கூ)
உலகில் யாவும்
தன்னியல்பிலே
மனிதவிலங்கே எதிரியல்பாய் அறிவினால் --- (ய)
--- நன்னாடன்.