வாழ்க்கைப் பயணம்

எழு எடு ஓடு திற
மூடு ஓடு விழுங்கு உறங்கு

எழு எடு ஓடு திற
மூடு ஓடு விழுங்கு உறங்கு

அவ்வப்போது உஷ்ண மூச்சுக்காற்றுக்கு
இரை கொடுத்து உறங்கவை

தட்டும் தேவைகளுக்கும்
கட்டும் தவணைகளுக்கும்
மீதமுள்ள ஆயுளை அடகுவை

எழு எடு ஓடு திற
மூடு ஓடு விழுங்கு உறங்கு

இபிகோ இல்லாத சட்டத்தில்
சிறைக்குப் போய் ஓய்வெடு சிறையாகிலும் ஓய்வளிக்கட்டும் உனக்கு..

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Jun-22, 3:05 pm)
Tanglish : vaazkkaip payanam
பார்வை : 415

மேலே