இயற்கை எனும் ஆலயம்


வைகறை மௌனம் கலைய
பறவைகள் மகிழ்ந்து இசை பாடும்

மலர்களெல்லாம் விரிந்து
பனித்துளி ஏந்தி மலர் ஆரத்தி எடுக்கும்

மலர் மஞ்சத்தில் துயின்ற தேன் வண்டும்
சிலிர்த்து இறகு விரித்து ரீங்காரம் பாடும்

நான்மறை வேதங்கள் பக்தன் நாவினின்று
ஓங்கி உயர்ந்து ஒலிக்கும்

நீலச் செவ்வான நெடு வீதியில்
ஆதவனின் தேர் அசைந்து எழுந்து வரும்

இயற்கை எனும் எழில் ஆலயம் மெல்ல
வாசல் திறக்கும் இளங்காலை நேரம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-11, 8:59 am)
பார்வை : 308

மேலே