என்ன அந்த சேதி

இலையோடு காற்று
சொன்னது
ரகசிய சேதி!

அதைக் கேட்டு
அசையுது
என்ன ஒரு காட்சி!

பூவெல்லாஞ் சிரிக்குது!
கிளையோ ஆர்ப்பரிக்குது!
என்ன அந்த சேதி?!

இசையாகப் பாடுது!
விசையாக ஆடுது!
என்ன அந்த சேதி?!

கரகோசம் எழுப்புது!
பிரகாசம் பொங்குது!
என்ன அந்த சேதி?!

காதலைச் சொன்னதோ?
கவியாக புனைந்ததோ?
என்ன அந்த சேதி?!

திருமணம் ஆனதால்
நறுமணம் கமழுதோ!
என்ன அந்த சேதி!

ஊடல் முடிந்த பின்
உவகையில் திளைக்குதோ?
என்ன அந்த சேதி?

நட்பின் நினைவுகள்
நெஞ்சில் நிறைந்ததோ?
என்ன அந்த சேதி?

மனங்கள் குளிர
மழை வரப்போகுதோ?
என்ன அந்த சேதி?

இருந்துட்டு போகட்டும்
ஏதோ ஒரு சேதி!

சந்தோசம் நிலைக்கட்டும்
திக்கெங்கும் பரவட்டும்!

எழுதியவர் : முகமது சுகைல் (11-Jun-22, 7:40 am)
சேர்த்தது : முகமது சுகைல்
Tanglish : yenna antha sethi
பார்வை : 289

மேலே