சிந்தனை செய் மனமே

சமரசங்கள் செய்து
வாழ்கின்ற வாழ்க்கையில்
அன்பு இருக்காது
நடிப்பு மட்டுமே இருக்கும்...!!

உன் வாழ்க்கை
உன் கையில் தான்
நீ நினைத்தால் மட்டுமே
வாழ முடியும்...!!

பிறர் வாழ்க்கையோடு
உன் வாழ்க்கையை
ஒப்பிட்டு பார்க்காதே
உன் வாழ்வின் நிம்மதியை
இழந்து விடுவாய்...!!

உன் வாழ்க்கை பாதையை
உன் கால்களால் கடந்து செல்
பிறரின் முதுகில் ஏறி
சவாரி செய்து
கடக்க நினைக்காதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jun-22, 6:30 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 228

மேலே