கண்ணீர்..!!
என்மீது உள்ள அன்பினால்
அடிக்கடி நீர்வீழ்ச்சி போல்
கண்ணீர் சிந்துகிறாள்..!!
அதீத அன்புகூட ஆபத்து என
அடிக்கடி நிரூபிக்கிறது
இந்த கண்ணீர்..!!
எனக்காக அழுதபோது
ஆனந்தம் கொண்ட மனது
என்னால் அழும்போது
தாங்கமுடியாமல் அதுவும் அழுகிறது..!!
பிறரால் வந்தாலும்
கண்ணீர் ஒரு பொக்கிஷமே
என்றும் சிலருக்காக
உண்மையான வரும்போது மட்டும்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
