அனைத்து விடு..
உன்னை அணைத்தே
ஆறுதல் பெறவேண்டும்
அன்பைக்காட்டி ஆசைமூட்டி
இளநெஞ்சில் கொள்ளாதே..
ஒத்தையில போறபுள்ள
மொத்தமாக ஏற்றுக்கொள்ளடி
சித்திரம் போல உன்னுடன்
சேர்ந்து வருகிறேனடி..
உன்னை அனைத்தே
அழுத்தம் கொடுத்திடவா - இல்லை
அசையாமல் மூச்சிக்குள்
உன்னுடன் கலந்திடவா..
ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும்
உன்னோடு கரைத்திடவா
நீமட்டும் தான்என் உயிர்என
உன்னைத் தழுவி அணைத்திட வா..
எத்தனைக் காலம்தான்
இப்படி புலம்புவது
ஒற்றைநாள் என்ஆசை
நிறைவேற படி - வந்து
என்னை அனைத்தையும்
விடு பெண்ணே..