பேசாதே..!!
கடும் வார்த்தைகளால்
என்னை அவதூறாக பேசாதே
கண்டிப்பா ஒருநாள் நீபேச
நான்இல்லாமல் போவேன்..!!
தினமும் என்னை காண மனதுக்குள்ளே பேசாதே
முகத்தைப் பார்த்து
முன்னே பேசிவிடு..!!
சிரித்து சிரித்து பேசி
சித்திரவதை உனக்குள் அனுபவிக்காத
சீக்கிரம் எதுவா இருந்தாலும்
பேசி விடு என்னிடம்..!!
என்னை காணும் போது
வார்த்தைகளைப் பேசாதே
விழி என்னும் கணையை கொண்டு
வெறும் மௌனத்தால்
என்னிடம் பேசிவிடு..!!