பரட்டையா சுருட்டையா

அன்புத் தம்பி ஆகாஷ் குமார்
நேற்றுப் பெண் பார்க்கப் போனோமே
இரட்டைப் பிறவிகள் இருவரும் அழகிகள்
ஒருத்திக்குப் பரட்டை முடி
இன்னோருத்திக்குச் சுருட்டை முடி.

பணக்காரக் குடும்பம்
கோடிகளில் புரளும் குடும்பம்
இரட்டையர் இருவரையும்
மணக்கும் ஒருவனுக்கே சொத்தாம்!.

இதையெல்லாம் சொன்னார்களே
உன் நினைவில் உள்ளதா தம்பி?
இருவருமே அழகான பெண்கள்
அன்பிலும் குறைவில்லை..

அக்கா நீ சொத்தை மட்டும் பார்க்கிறாய்
ஒருத்தி உனை மணந்த
மாமா படும்பாட்டைப் பார்த்த பின்பும்
இருவரையும் நானே மணந்தால்
என் நிலைம என்னாகும் தெரியுமா?

போடா தம்பி, பிழைக்கத் தெரியாதவனே!
உலகில் இருபெண்களை மணந்தவர்
யாருமே இல்லையா?
திரையாளிகள் அரசியவாதிகள்
பெரும் பணக்காரர் பலர் இருமனைவியரே!

கோடிகளுக்கு அதிபதியாக உனக்கேனே
மனதில் ஆசையே இல்லையா?
என்னடா சொல்கிறாய் தம்பி?
அக்கா பேச்சைக் கேள் அனுகூலம் பலவுண்டு.

பரட்டையும் அழகு சுருட்டையும் அழகு
இருவரையும் மணக்க விருப்பே இல்லை
எத்தனை தடவை நீ கேட்டாலும்
என் பதில் இதுவே; மனம் மாறமாட்டேன்.

நீ சொல்வதும் சரிதான்டா தம்பி
கேட்டுப் பார்க்கவா அவர்களை
ஒருத்தியை மட்டும் மணக்க
நீ சம்மதிப்பதாய்ச் சொல்லவா?

சொத்து முழுதும் தரமாட்டார்கள்
திருமணத்தை அவர்களே நடத்தி
சொத்தில் பாதியை கொடுத்து
உனை வாழ வைக்கக் கேட்டுப் பார்க்கவா?

இரட்டையர் இருவரையும் மணப்பவனுக்கே
சொத்து என்று அவர்களே சொன்ன பின்பு
ஒருத்தியை மணமுடித்துக் கொடுக்க்ச் சொன்னால்
உன்னை இங்கு வந்தே மொத்திவிடுவார்களே அக்கா!

எனக்கு பரட்டையும் சுருட்டையும் சரிப்படாது அக்கா
பயில்வான் எவனவாது அவர்களை மணக்கட்டும்
சொத்துக்கு பேரசைப்பட்டு உன் விருப்பத்தைக் கூறி
மொத்துக்கு ஆளாகி அவமானப்பட வேண்டாம் அக்கா.

எழுதியவர் : மலர் (14-Jun-22, 10:37 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 39

சிறந்த கவிதைகள்

மேலே