அம்மா கவிதைகள்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*அம்மா கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
குழந்தை பிறந்தவுடன்
எல்லா அம்மாக்களும்
குழந்தைக்கு
பால் கொடுப்பார்கள்
முத்தம் கொடுப்பார்கள்
அரவணைப்பு கொடுப்பார்கள்
ஆனால்
நீதானம்மா
நான் பிறந்தவுடன்
எனக்காக கொடுத்தாய்
"உயிரையே...!"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா !
என் பசிக்கு
பாலானாய் ....
என் உறக்கத்திற்கு
படுக்கையானாய்.....
படிக்க புத்தகமானாய்....
என் நோய்க்கும்
மருந்தானாய்.....
என் விளையாட்டு
பொம்மையானாய் .....
பதிலுக்கு
உனக்கு
நான எதுவாகவாவது
ஆகும் முன்னறே!
ஏனம்மா "காலமானாய் ?"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மகனே!
நான்
முதியோர் இல்லத்தில்
நிம்மதியில்லாமல்தான்
இருக்கிறேன்...
என்னை
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விட்டாயே! என்றல்ல...
என்னை
முதியோர் இல்லத்தில்
சேர்ததப் பிறகாவது
நீ
நிம்மதியாக
இருக்கிறாயா என்றுதான்...?.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பிரசவ வலியை விட
பெரிய வலி
எதுவும் இல்லை
என்பார்கள்.....
அப்படிப்பட்ட வலியைத் தாங்கி
நம்மைப் பெற்றதற்கு
நன்றிக் கடனாகத்தான்
நமக்கு
வலிக்கும் போதெல்லாம்
*அம்மா !* என்று
அழைக்கின்றோமோ..?
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈