ஈசனே போற்றி பாகம் 19

திங்களும் கங்கையும் சூடிய முடியை,
கண்டதாய் உரைத்த பொய் பிரம்மனின் தலையை,
பாவங்கள் சேரும் என்று தெரிந்த பின்னாலும்,
நியாயத்தை நிலைபெற காட்டிடும் பாதை.


மோகத்தில் வாழும் எம் மானிட உறவும்,
தேகத்தை நேசிக்கும் தெளிவற்ற வாழ்வும்,
பொருள் கொண்ட கள்வனின் மகிமையை போற்றி,
மதி கொண்ட மானிடன் ஒதுங்குவதேனோ.


வழக்குகள் தீர்த்திட வழிகளும் கொடுத்து,
நியாயத்தை அறிந்திட அறிவையும் தந்து,
வேதனை புரிந்திடும் கருணையும் விதைத்து,
நன்மைக்கு மறதி தான் வழி என்று காட்டும்.


மதிப்பற்ற சாம்பலை எம் நெற்றியில் ஏற்றி,
பக்தி தான் ஞானத்தின் வழி என்று காட்டி,
சிவம் அற்று உலகினில் எதுவுமே இல்லை,
உணர்ந்தவன் வாழ்வே தான் மோட்சத்தின் எல்லை.


கோபத்தில் பைரவர் அளித்திடும் வேகம்,
எல்லையில் காத்திடும் முனீஸ்வரன் கரமும்,
ஞானத்தை போதிக்கும் தட்சிணாமூர்த்தியும்,
மனதில் நாம் வணங்கிடும் ஈசனின் வகையே.


ஜென்மங்கள் பலவற்றை கடந்து உம்மை உணர்ந்தோம்,
நின் அருள் இருக்கையில் உம்மையே தொழுதோம்.
கர்மங்கள் தீர்திட வழி ஒன்று கேட்டோம்,
பிறப்பற்ற நிலை பெற்று உம்மையே சேர்வோம்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 7:34 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 11

மேலே