ஈசனே போற்றி பாகம் 18

தாயுமான அப்பனே, எம் மூச்சில் கலந்த தேவனே.

காலம் அறிந்த ஞானியே, எம் வாழ்வை காக்கும் ஈசனே.

வான்முகடு காணாத ஆதியே, எண்ணத்தில் வளர்கின்ற புதுமையே.

கர்வத்தை போற்றும் பொருட்களை தவிர்த்து, பஸ்பம் அதை ஏற்று அருளும் எளிமையே.

பொன் பற்று, பொருள் பற்று, பந்த பற்றும், அகலவே கொண்டேனே சிவ பற்று.

பற்றுதல் இல்லாத இன்பத்தை, ரசித்தேனே அப்பனின் அருள் பெற்று.

கடமைகள் குறைவற்று முடிந்ததும், அதன் பலன் மீது கொள்ளாத மோகம்.

ஆசைகள் தீண்டாத மனமும், நிலை இதையே என்றும் விரும்பும் எம் உள்ளம்.

கேட்கும் மனம் கொண்ட, வெறும் மானிடன் நானே.

ஆசை படும் தன்மையை இழக்க வரம் கேட்டேன்.

கேட்டதும் தந்து எம்மை தனித்து விட வேண்டாம்.

சிவ பற்று மட்டும் எம்மை என்றும் நீங்க வேண்டாம்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 7:33 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 14

மேலே