ஈசனே போற்றி பாகம் 17

பிறவிகள் பலவற்றை எடுக்கின்ற போதிலும்,
காரணம் அறியாத நிலையே பெற்றேன்.

உன் பாதம் தொடுகின்ற தூசி துகள் ஆகவே,
மார்கம் அதை அறியாத நிலையை கண்டேன்.

உன்னில் இருந்து புறப்பட்டு, ஞானம் பெற அலைகின்ற,
ஆன்மாவிற்கு மோட்சம் எனும் முடிவை கேட்டேன்.

பட்டு அறி என்று என்னை ஒதுக்கியே வைக்காமல்,
கற்றுத்தர குருவாக உம்மையே அழைத்தேன்.

ஞானத்தை அடையவே தேகத்தை உடுத்தினேன்,
தோற்றத்தின் பிழைகளை மன்னிக்க வேண்டினேன்.

உடுத்திய தேகத்தின் உறவென்ற கடமைகள்,
மோட்சத்தின் மார்கத்தில் தடையோ? அஞ்சினேன்.

நான் வணங்கும் ஈசனே பாதி உடல் மனைவிக்கு,
தந்த கதை கேட்டதும் அச்சத்தை நீக்கினேன்.

குருவாக ஏற்று உம்மை சரணடைந்த சீடனுக்கு,
மோட்சத்தின் மார்க்கத்தை காட்ட வேண்டினேன்.

தெளிவான ஞானமும், அதற்கான பயிற்சியும்,
வழங்கிடும் வரம்தன்னை உம்மிடம் கேட்கிறேன்.

கடமைகள் முடிந்து மறுபிறவி இல்லாத,
ஈசனே உம்மை சேரும் நாள் வேண்டுவேன்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 7:33 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 22

மேலே