ஈசனே போற்றி பாகம் 16
பணிவை துறந்த கல்வி பயிலும், அறிவிழந்த மாணவன் போல்,
கணம் தரித்து ஞானம் தவிர்த்து, அர்த்தம் அற்ற வாழ்வை வாழும்,
எம்மை போன்ற கோடி மக்கள், தவறை அறியா நிலையில் உள்ளோம்.
காக்க வந்த தெய்வம் என்று, அறிய தவறி கேளி செய்து,
உடையை பார்த்து அறிவை அளந்து, செய்த தவறின் கணக்கை மறந்து,
மீண்டும் மீண்டும் பிறப்பை அடைந்தும், சாதித்த கர்வம் அடைவதேனோ.
உம்மால் சேர்ந்த பூத உடலில், எம்மாய் வாழும் ஈசன் துளியே.
செல்லும் பாதை மோட்சம் காணா, அப்பாதை எமக்கு காட்டா வண்ணம்,
அறிவை வழங்கி வழியை காட்டி, தடைகள் தடுக்கா பலத்தை தாரும்,
அய்யா உம்மை தலைவனாய் ஏற்று, தொண்டனாய் வாழ சித்தமாய் இருக்கும்,
தகுதி அற்ற அற்பன் என்று, ஒதுக்கிடாமல் பக்தி கண்டு,
மனித தேகம் தரித்த ஆன்மா, எனக்கு பிறவா மோட்சம் அருள்வாய்.