ஈசனே போற்றி பாகம் 15
ஆணி பட்டு பிளக்கும் கட்டை, பணி முடிந்த தேகம் தான்.
பச்சை மரத்தை போலே பற்றி, உன் நினைவை ஏற்க ஆசை தான்.
எந்த ஜென்மம் செய்த நன்மை, உந்தன் நாமம் மனதிலே.
ஈசன் உன்னை சரணடைந்து, பாதம் பற்றும் பிள்ளை நான்.
அண்டத்தின் தொடக்கம் நீயே, தொடர்ச்சி மற்றும் முடிவும் நீயே.
அசையும் அனைத்தின் இயக்கம் நீயே, இயல்பும் நீயே, அறிவும் நீயே.
உயிர் இல்லாத காற்றும் நீயே, இன்றி வாழாத உயிரியல் நீயே.
அறிவின் பாதை கண்ட போது, தோழன் நீயே, வழிகாட்டி நீயே.
உன்னை பாடும் புலவரெல்லாம், அறிவில் சிறந்த ஞானிகள்.
அவர்கள் கொடுத்த பாடல் கேட்டு, சிலிர்க்கும் எத்தனை தேகங்கள்.
பாட்டில் ஞானம் புகுத்தும் தன்மை, உந்தன் அருளால் அல்லவோ.
அந்த கருணை எமக்கும் அருள்வாய், வேண்டும் பக்த கோடிகள்.
ஞானம் என்றால் ஈசன் என்று, சான்றோர் வாக்கு ஆகுமே.
ஞானதானம் கேட்ட எமக்கு, அளிக்கும் கடமை உனதாகுமே.
வாழ்வில் பாவம் சேரா வண்ணம், உந்தன் அருளால் இயற்றும் பாடல்,
உந்தன் முன்பே பாடி வந்தால், பிறப்பென்னும் துன்பம் தீருமே.